01

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0638/2016: Northern Water Supply Project for Anuradhapura

638/'16

9.

கௌரவ செஹான் சேமசிங்க,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) அநுராதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு நீர் வழங்கல் கருத்திட்டம் தற்போது தொழிற்பட்டு வருகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) அக்கருத்திட்டம் தொழிற்பட்டு வருமாயின்,

(i) அதன் அனுகூலங்கள் எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியில் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;

(ii) அதன் மூலம் உள்ளவாங்கப்படுகின்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

(iii) அப்பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) குறித்த நலன்பெறுனர் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(v) அதன் பணிகளைத் துரிதப்படுத்துவற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks