01

E   |   සි   |  

 திகதி: 2016-07-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0621/2016: Allegations against Chief Minister Uva

621/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) பல மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊவா மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிராக நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ஆ) (i) முதலமைச்சர் ஆலோசகர்களை ஆட்சேர்த்துள்ளாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எத்தகைய அதிகாரங்களின் கீழ் என்பதையும்;

(iii) ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்குச் செலுத்துகின்ற கொடுப்பனவுகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

(iv) மேற்படி ஆட்கள் சட்டவிரோதமான முறையில் ஆட்சேர்க்கப்பட்டிருப்பின், அவர்களை அகற்றுவதற்கும், அது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக சட்ட ரீதியாக செயலாற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks