பார்க்க

01

E   |   සි   |  

 திகதி: 2016-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0573/2016: Compensation for Mr. M.Mimsiad

573/ ’16 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கொழும்பு – கண்டி வீதியில், வீதியவத்த தொடக்கம் நிட்டம்புவ வரையான பகுதியை விஸ்தரிக்கும் கருத்திட்டத்திற்கு கல்எலிய, மஸ்ஜித் மாவத்தை, இலக்கம் 5/1, என்ற முகவரியில் வசிக்கும் திரு. எம்.ஆர்.எம். மிம்சியாட் என்பவருக்கு சொந்தமான 392 கம், 164 இலக்க காணித்துண்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதென்பதையும்; (ii) மேற்படி காணிக்கு இற்றைவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு நேராக அமைந்துள்ள, வர்த்தக ரீதியான பிரதேசத்துடன் இணைந்துள்ள இக்காணித்துண்டு குறைந்த பெறுமதிக்கு விலைமதிப்பிடப்பட்டுள்ளமையின் மூலம் அநீதிக்கு உள்ளாகியுள்ள திரு. மிம்சியாட்டுக்கு, தற்போதைய விலைமதிப்பீட்டு பெறுமதியை கருத்திற்கொண்டு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-23

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks