பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2016-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0571/2016: Low Income families affected by wild elephant attacks

571/ ’16 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) மட்டக்களப்பு மாவட்டத்தில், கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி, வாகரை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் யுத்த சூழ்நிலை முடிவுற்றதைத் தொடர்ந்து மீள் குடியமர்த்தப்பட்ட மக்களால் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கட்டப்பட்ட பல குடிசைகள் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக அழிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா? (ஆ) (i) காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்; (ii) காட்டு யானைகளின் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் உடற் காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்; (iii) காட்டு யானைகள் ஊடுறுவியதன் விளைவால் வயல்கள் உட்பட சேனைப் பயிர்ச்செய்கை அழிவடைந்ததன் மூலம் தொழில்களை இழந்துள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்; அவர் குறிப்பிடுவாரா? (இ) (i) வீடுகளை இழந்தவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், உயிரிழந்த, உடற் காயங்களுக்கு உள்ளான மற்றும் தொழில்களை இழந்த ஆட்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றதா என்பதையும்; (ii) ஆமெனின், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்; (iii) ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-22

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks