01

E   |   සි   |  

 திகதி: 2016-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0570/2016: Project for removal of waste water and renovation of Anuradhapura weekly fair ground and Fish market

570/ '16

கௌரவ செஹான் சேமசிங்க,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) முதற் கட்டத்துக்காக ரூபா 15 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மாநகர சபையின், மீன் சந்தைப் பிரதேசம் உள்ளிட்ட வாராந்த சந்தைப் பிரதேசத்தை புதிய கட்டுமானங்களுடன் கூடியதாக நவீனமயப்படுத்தும் மற்றும் கழிவு நீரை அகற்றும் கருத்திட்டத்தின்,

(i) முதற் கட்டத்தை பூர்த்தி செய்து, திட்டமிடப்பட்டுள்ளதன் பிரகாரம் திசெம்பர் 31ஆந் திகதிக்கு முன்னர் மக்களுக்கு கையளிப்பாரா;

(ii) ஆமெனில், அத் திகதி யாது;

(iii) இரண்டாவது கட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா;

(iv) ஆமெனில், குறித்த கட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

(v) இரண்டாவது கட்டத்தை பூர்த்தி செய்து, மக்களுக்கு கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-09

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks