பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
566/ '16
8.
கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) மாத்தறை மாவட்டச் செயலாளரினால் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொட்டுவேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின், மாத்தறை, கடற்கரை வீதி, 47 ஆம் இலக்க காணி, பத்தரமுல்ல, பெலவத்த, சப்புமல் பிளேஸ், 793 ஆம் இலக்க விலாசத்தில் வசிக்கும் திரு. சிராஜ் காதரிடமிருந்து தற்காலிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டு மீள கையளிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நினைவுகூரும் கொண்டாட்டத்தை தொடர்ந்து திரு. காதருக்கு மீள கையளிக்கப்பட்ட மேற்படி காணியை, காணி கொள்ளல் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் சுவீகரிப்பதற்கு 2014.12.04 ஆம் திகதியன்று மாத்தறை பிரதேச செயலாளரினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு திரு. காதர் 2014.12.19 ஆம் திகதிய கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதையும்;
(iv) இதுவரை குறித்த அறிவித்தல் இரத்துச் செய்யப்படாததன் காரணத்தினால் மேற்படி காணியை பயன்மிக்கதாக அபிவிருத்தி செய்வதற்கு உரிமையாளருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்குறிப்பிட்ட காணியை சுவீகரிப்பதற்கான அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-09
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks