01

E   |   සි   |  

 திகதி: 2016-06-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0499/2016: Teacher appointments to Kinniya Educational Zone

499/ ’16 கௌரவ இம்ரான் மஹரூப்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கிண்ணியா கல்வி வலய ஆசிரியர் வள மத்திய நிலையத்திற்கு இணைக்கப்பட்டுள்ள ஆட்களின் பெயர், முகவரி மற்றும் ஆசிரியர் சேவைத் தரம் வெவ்வேறாக யாவை; (ii) இவ்வாசிரியர்களை இணைப்பதற்காக உபயோகிக்கப்பட்ட சுற்றுநிருபம் யாது; (iii) இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி மற்றும் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்ட திகதி யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) கல்விச் சுற்றுநிருபங்களுக்கு முரணான விதத்தில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிவாரா; (ii) நல்லாட்சியின் கீழ் இவ்வாறான முறைகேடுகளை இல்லாமல் செய்வதற்காக உரிய முறையில் விண்ணப்பங்களைக் கோரி தகைமையுள்ளோரை நியமிப்பதற்கு இயலுமான வரை விரைவில் நடவடிக்கை மேற்கொள்வாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-10

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks