04

E   |   සි   |  

 திகதி: 2010-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0302/2010: Sigiriya

0302/ ‘10

கெளரவ தயாசிறி ஜயசேகர,— தேசிய மரபுரிமைகள், கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     உலக மரபு உரிமையான சீகிரியாவில், குளவிக் கூடுகளைக் கலைப்பதற்காக இரசாயனப் பொருள் பாவிக்கப்பட்டதா என்பதையும்,

           (ii)    குளவிகள் கலைக்கப்பட்டதன் காரணமாக வேறு பூச்சி இனங்கள் அப் பிரதேசத்தினை ஆக்கிரமித்துள்ளனவா என்பதையும்,

(iii) ஆமெனில், அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாது என்பதையும்,

(iv) சீகிரியா தொல்பொருளியல் பிரதேசம் ஜப்பானிய கம்பனிக்கு விற்கப்பட்டு, குத்தகைக்கு விடப்பட்டு, அல்லது இதற்குச் சமனான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) சீகிரியா மலையடிவாரத்தில் மலசலகூடத்தொகுதியொன்று அமைக்கப்படுவது குறித்து அவர் அறிவாரா?

(இ) சீகிரியாவிற்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நிர்மாணப்பணிகளையும் நிறுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-07-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks