பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
446/ '16
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில், கண்டி மாவட்டத்தில், நாவலப்பிட்டி வீச்சிடைக் காட்டில், சமனலகம பிரதேசத்தில் 7000 பைனஸ் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றதென்பதையும்;
(ii) நாவலப்பிட்டி, மாபாகந்தையில் 200 ஏக்கர்களுக்கும், தொலொஸ்பாகே, மல்கொல்லயில் 50 ஏக்கர்களுக்கும் உரிய பைனஸ் மரங்கள் தனியார் வியாபாரிகளின் மூலம் வெட்டி அகற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) தொலொஸ்பாகே, பரகல பிரிவில் சுமார் 2500 மரங்களை அகற்றுவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள போதிலும், தற்போது அனுமதியின்றி சுமார் 12000 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட சகல மரங்களையும் அகற்றுவதற்காக அனுமதியளிக் கப்படும்போது பின்பற்றப்பட்ட முறையியல்களும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் பெயர்களும் யாவையென்பதையும்;
(ii) அதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்படவேண்டிய பெரும்தொகை பணம் இழக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) மேற்படி மோசடிச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-05-18
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks