logo

03

E   |   සි   |  

 திகதி: 2016-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0405/2016: Person/s who threatened Mr. Mahindaratna Aluthgamage & his mother

405/ ’16

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     கங்க இஹல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு. மஹிந்தரத்ன அலுத்கமகேயின் வீட்டிற்கு 2015.12.13 ஆம் திகதி ஆயுதங்களுடன் நுழைந்த கும்பலொன்றும் சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோத்தர்களும் முன்னாள் தலைவருக்கும் அவரது தாயாருக்கும் துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததாக முன்னாள் தலைவரினால் புதிய குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இவ்வாறான மற்றுமொரு முறைப்பாடு 2015.04.14 ஆம் திகதி முன்னாள் தலைவரினால் புதிய குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக புதிய குருந்துவத்த பொலிஸ் நிலையத்தினால் இற்றைவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2015.12.13 ஆம் திகதி முன்னாள் தலைவருக்கும் அவருடைய தாயாருக்கும் துப்பாக்கியை காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்த ஆளினதும் அவரின் பாதுகாப்புக்காக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பெயர்கள் யாவையென்பதையும்;

(ii) இவ்வாறு முன்னாள் தலைவரின் வீட்டிற்கு இரண்டு தடவைகள் நுழைந்து மரண அச்சுறுத்தல் விடுத்த ஆள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில்  சட்ட ரீதியாக செயலாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-11

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks