பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0293/ ‘10
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கமைய, 9 மீற்றர் நீளமான 21000 மரத்தூண்களும் 10 மீற்றர் நீளமான 3400 மரத்ததூண்களும் கொள்வனவு செய்வதற்காக விலை கோரப்பட்டது என்பதையும்,
(ii) குறைந்தபட்ச விலைகளைச் சமர்ப்பித்த அரச மரக் கூட்டுத்தாபனத்தின் கேள்விப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும்,
(iii) இரண்டாவதாக குறைந்தபட்ச விலைகளை சமர்ப்பித்த தென்னாபிரிக்க நிறுவனத்திற்கு கேள்விப் பத்திரம் அளிக்கப்பட்டதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) எவ்வாறாயினும், 9 மீற்றர் நீளமான 10500 மரத்தூண்களும் 10 மீற்றர் நீளமான 1700 மரத்தூண்களும் கொள்வனவு செய்யப்பட்டதென்பதையும்,
(ii) இதில் தென் மாகாணத்திற்கு விநியோகிக்கப்பட்ட 2363 தூண்களில் 73 தூண்கள் மட்டுமே பாவனைக்கு எடுக்கப்பட்டதென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) அரச மரக் கூட்டுத்தாபனத்திற்கு மேற்கூறிய கேள்விப் பத்திரத்தை அளிக்காமை யினால் ரூபா 79.5 மில்லியன் நட்டம் ஏற்பட்டதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) அந்த நட்டம் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்கள் எவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-20
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks