02

E   |   සි   |  

 திகதி: 2016-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0366/2016: Special interest rates to Senior Citizens

366/ ’15

 

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி அமைச்சரைக்  கேட்பதற்கு,—           

(அ)      (i)    2015 சனவரி மாதம் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையின் மூத்த பிரஜைகளுக்கு 15% வட்டி வீதத்தின் கீழ் ரூபா 10 இலட்சம் தொகையை அரச வங்கிகளில் வைப்பிலிட வாய்ப்பு வழங்கப்பட்டதென்பதையும்;

(ii) பின்னர் மேலும் ரூபா 5 இலட்சம் தொகையை அதே வட்டி வீதத்தின் கீழ் வைப்பிலிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி அ (ii) இல் குறிப்பிடப்பட்ட பணத்தொகையை அரச வங்கிகளில் வைப்பிலிட முடியுமா என்பதையும்;

(ii) மேற்படி வட்டி வீதத்தின் கீழ் தனியார் வங்கிகளிலும் வைப்பிலிட முடியுமா என்பதையும்;

(iii) மேற்படி பணத்தொகையை தனியார் நிதி நிறுவனங்களில் மாத்திரமா வைப்பிலிட முடியும் என்பதையும்;

(iv) தனியார் நிதி நிறுவனங்களில் மாத்திரம் எனின், அந்த நிறுவனங்கள் வங்குரோத்து அடைந்தால் மேற்படி வரவு செலவுத் திட்டத்துக்கமைய மூத்த பிரஜைகள் வைப்பிலிடும் பணத்துக்கு அரசு பொறுப்பு கூறுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-09

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks