logo

02

E   |   සි   |  

 திகதி: 2016-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0363/2016: Army Camp near Chandrika Wewa and destruction of forest

363/ ’15

கௌரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்திரிகா வாவி ஒதுக்குப் பிரதேசத்தில் வனச் செய்கை ஆரம்பிக்கப்பட்டிருந்த எழில்மிகு நிலப்பரப்பில் தற்போது இராணுவ முகாமொன்று தாபிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) அதற்கான அனுமதி யாரால் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) அனுமதி வழங்கப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;

(iv) அதனூடாக மேற்படி எழில்மிகு சந்திரிகா வாவியை அண்டியதாக பாரியளவிலான வன அழிப்பு இடம்பெற்றதென்தையும் வாவி மாசடைகின்றதென்பதையும் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி நிலப்பரப்பு சொந்தமாயுள்ள நிறுவனம் யாதென்பதையும்;

(ii) அந்நிறுவனம் இதனை வனச் செய்கைக்காக ஏதேனும் நிறுவனத்திற்கு சட்டரீதியாக ஒப்படைத்துள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்நிறுவனம் யாதென்பதையும்;

(iv) மேற்படி எழில்மிகு சந்திரிகா வாவி ஒதுக்கத்தினைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-03-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks