04

E   |   සි   |  

 திகதி: 2016-02-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0362/2016: Highway Projects 2015 under RDA

362/ ’15

 

கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     2015 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியங்களின் மூலம் அமுல்படுத்தப்பட்ட பிரதான வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டங்களில் வெளிநாட்டு நிதியங்கள் மற்றும் உள்நாட்டு நிதியங்கள் மூலம் அமுல்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் தனித்தனியே யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) குறித்த கருத்திட்டங்களைக் கண்காணிப்பதற்காக கருத்திட்ட ஒப்படைப்பு அடிப்படையில் ஆலோசகர்கள் ஆட்சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி ஆலோசகர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) மேற்படி ஆலோசகர்களுக்கு இருக்க வேண்டிய தொழில்சார் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

(iv) இவர்களுக்குச் செலுத்தப்படுகின்ற மாதாந்த சம்பளம் மற்றும் வேறு கொடுப்பனவுகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(v) மேற்படி சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் செலவிடப்பட்ட மொத்தத் தொகை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-02-26

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks