பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
353/ '15
கௌரவ விஜித ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கம்பளை கல்வி வலயத்துக்கு சொந்தமான, மாவத்துறை கிராமத்தில் அமைந்துள்ள, வெலிகங்க கனிஷ்ட பாடசாலை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதென்பதையும்;
(ii) இப்பாடசாலை மலை உச்சியில் அமைந்துள்ளமையால், பாடசாலை மாணவர்கள் சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தை ஒரு நாளைக்கு இரு தடவைகள் நடந்து செல்ல வேண்டி நேர்ந்துள்ளதென்பதையும்;
(iii) பற்றைக் காடுகளைக் கொண்ட ஒரு பாழடைந்த வீதியில் சுடுகாட்டினையும் கடந்து செல்ல வேண்டி நேரிடுதல் போன்ற சிரமங்கள் காணப்படுகின்றமையின் காரணமாக, ஆசிரியர்கள்கூட இப் பாடசாலையில் சேவையாற்ற வருவதற்கு பின்வாங்குகிறார்கள் என்பதையும்;
(iv) இத்தகைய கஷ்ட நிலமைகளைத் தவிர்த்து, பாடசாலையை வேறொரு இடத்தில் அமைப்பதற்காக, பெருந்தோட்ட அமைச்சுக்கு சொந்தமான, கட்டிடமொன்றுடன் கூடிய ஒரு காணியை கல்வி அமைச்சு கொள்வனவு செய்துள்ளதென்பதையும்;
(v) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணியும் கட்டடமும் உரித்தாகின்ற தோட்டத்தின், முகாமையாளரின் அழுத்தம் காரணமாக புதிய கட்டடத்தில் இப்பாடசாலையை ஆரம்பித்தல் தடைப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நன்மை கருதி இந்தப் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்காது, மேலே (அ)(v) இல் குறிப்பிடப்பட்டுள்ள அழுத்தங்களையும் தடுத்து, இதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(ii) ஆமெனில், இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-26
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-26
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks