பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
318/ ’15
கௌரவ ஜயந்த சமரவீர ,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் பேணிவரப்படுகின்ற முப்படைகளினதும் முகாம்களை 2016 ஆம் ஆண்டில் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா;
(ii) அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள முப்படை முகாம்களின் எண்ணிக்கை யாது;
(iii) அகற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற இராணுவ முகாம்களின் பெயர்கள் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்றவகையில் தனித்தனியாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் பேணிவரப்படுகின்ற இராணுவ முகாம்களைச் சார்ந்ததாக உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை 2016 ஆம் ஆண்டில் விடுவிக்கவோ அல்லது அவற்றின் நிலப்பரப்பினைக் குறைக்கவோ திட்டமிடப்பட்டுள்ளதா;
(ii) உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுகின்ற அல்லது குறைக்கப்படுகின்ற இராணுவ முகாம்களின் பெயர்கள் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்றவகையில் தனித்தனியாக யாவை;
(iii) விடுவிக்கவோ அல்லது குறைக்கவோ திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு வலயங்களின் நிலப்பரப்பு ஒவ்வொரு முகாம் வாரியாக தனித்தனியாக யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-09
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks