பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
317/ ’15
கௌரவ ஜயந்த சமரவீர,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009.05.19 ஆம் திகதியளவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேணிவரப்பட்ட முப்படை முகாம்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி முகாம்களில் 2014.12.31 ஆம் திகதியளவில் பேணிவரப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை எத்தனை;
(iii) மேற்படி முகாம்களின் பெயர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என்றவாறு வெவ்வேறாக யாவை ;
(iv) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள முகாம்களில் உயர் பாதுகாப்பு வலயங்களுடன் கூடியதாக பேணிவரப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை யாது; இம்முகாம்களின் பெயர்கள் யாவை;
(v) ஒவ்வொரு முகாமினாலும் பேணிவரப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களின் நிலப் பரப்பளவு முகாம்களின்படி வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015.10.30 ஆம் திகதியளவில் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பேணிவரப்பட்ட முப்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி முகாம்களின் பெயர்கள் தரைப்படை, விமானப்படை, கடற்படை என்றவாறு வெவ்வேறாக யாவை;
(iii) மேற்படி முகாம்களில் உயர் பாதுகாப்பு வலயங்களுடன் கூடிய பேணிவரப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவு; இம் முகாம்களின் பெயர்கள் யாவை;
(iv) மேற்படி முகாம்களினால் பேணிவரப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களின் நிலப் பரப்பளவு முகாம்களின்படி வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-08
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks