04

E   |   සි   |  

 திகதி: 2016-01-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0313/2016: ரக்வான - மாதம்பே வீதி காப்பட் இடும் கருத்திட்டம் : ஆரம்பத் திட்டம்

313/ '15

கௌரவ ஹேஷா விதானகே,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ரக்வான - மாதம்பே வீதியை காப்பட் இடும் கருத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதென்பதையும்;

(ii) ஆரம்பத் திட்டம் பாரியளவில் மாற்றப்பட்டு கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பதையும்;

(iii) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் ஆரம்பத் திட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கு இணங்கப்பட்டதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆரம்பத் திட்டம் பாரியளவில் மாற்றப்பட்டு கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) ஆரம்பத் திட்டத்திற்கு அமைவாக மேற்படி வீதியின் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டம் உரியவாறு மேற்கொள்ளப்படாமையால் மேலதிகமாக செலவிட நேரிடுகின்ற பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி பணத்தை பொறுப்புக்கூறவேண்டியவர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-28

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks