பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
296/ ’15
கெளரவ எம்.எச்.எம். சல்மான்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில், மெததும்பர பிரதேச சபை மூலம் ‘புரநெகும’ கருத்திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்கான வர்த்தக அங்காடி ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வர்த்தக அங்காடியின் விற்பனை நிலையங்களை வழங்கும் பொருட்டு பின்பற்றப்படுகின்ற நடைமுறை யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) அன்று இலங்கை மகாவலி அதிகார சபைக்கும், இன்று பிரதேச சபைக்கும் வரி செலுத்தி நடைபாதை வியாபாரிகளாக புடவை விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதால், குறித்த விற்பனை நிலையங்களை வழங்கும் போது உள்ளூராட்சி ஆணையாளரின் 1980/46 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 3 மற்றும் 5 ஆம் பிரிவில் காட்டப்பட்டுள்ள அறிவுரைகளை கவனத்தில் கொள்ள ஆலோசனை வழங்குவாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-26
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-26
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks