04

E   |   සි   |  

 திகதி: 2016-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0286/2016: கொலொன்னாவை பிரதேச துணை வீதிகள் நீரில் மூழ்குதல் : தீர்வுகள்

286/ '15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மழைக் காலங்களில் கொலொன்னாவை பிரதேசத்தில் பல துணை வீதிகள் நீரில் மூழ்குகின்றதென்பதையும், இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைகின்றதென்பதையும் அவர் அறிவாரா?

(ஆ) (i) கொலொன்னாவைத் தொகுதியில் அவ்வாறு நீரில் மூழ்குகின்ற துணை வீதிகள் மற்றும் பிரதேசங்கள் யாவையென்பதையும்;

(ii) அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துகின்ற வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) மேற்படி பிரதேசங்களின் கால்வாய்களை துப்புரவு செய்து, ஒழுங்காக நீர் வடிந்தோடுவதற்காக கால்வாய்களை அமைப்பதற்கான திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-24

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-24

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks