04

E   |   සි   |  

 திகதி: 2016-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0280/2016: Meethotamulla Garbage Heap - Removal

280/ ’15

 

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     மீதொட்டமுல்லை குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா;

           (ii)     நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்ட மீதொட்டமுல்லை குப்பை மேட்டை மீள்சுழற்சிப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) இதற்காக வழங்கப்படும் அரச தலையீடு யாது;

(iv) இந்த மீள்சுழற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மீள்சுழற்சி வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் கொழும்பு நகர கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுமா;

(ii) ஆமெனில், இரண்டாம் கட்டத்தின் கீழ் மீதொட்டமுல்லை குப்பை மேட்டிலுள்ள கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுமா;

(iii) மேற்படி குப்பை மேட்டின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் குப்பை மேட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு நியாயம் வழங்க கொழும்பு மாநகர சபையுடன் சேர்ந்து வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா;

(iv) ஆமெனில், இது தொடர்பான விபரமான அறிக்கை​யொன்றை சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-02-23

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks