பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-01-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0273/2016: சனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கான சூழ்ச்சி : குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வு

273/ ’15

 

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     தேசிய பாதுகாப்பிற்கும் சனநாயகத்திற்கும் ஆபத்து என்பதால், 2015 சனவரி 08 ஆம் திகதி இரவு சனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கான சூழ்ச்சி பற்றி முன்னுரிமை அடிப்படையில் புலனாய்வு செய்யுமாறு கோரி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2015.01.14 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப் பட்டதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி புலனாய்வு நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) மேற்படி புலனாய்வு பற்றிய சட்ட மாஅதிபரின் அபிப்பிராயம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iv) மேற்படி முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-28

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks