01

E   |   සි   |  

 திகதி: 2016-02-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0238/2016: GB-2865 இலக்க டிபெண்டர் வாகனம் : விபரம்

238/ '15

 

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான GB-2865 இலக்கத்தைக் கொண்ட டிபெண்டர் வாகனத்தை 03 மாத குறுகிய கால பாவனைக்காக பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரொருவரும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் 06 ஆண்டுகள் அனுமதியின்றி பயன்படுத்திவிட்டு பின்னர் அதன் நான்கு சக்கரங்கள் உட்பட பல பாகங்களை அகற்றிய நிலையில், வாகன அடிச் சட்டத்தை மாத்திரம் கடந்த 2015 ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னறிவிப்பின்றி, இடர் உதவி வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்து அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் வளவில் கைவிட்டுச் சென்றுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ) (i) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் உத்தியோகபூர்வ ரீதியில் GB-2865 இலக்கத்தைக் கொண்ட டிபெண்டர் வாகனம் வழங்கப்பட்டிருந்த அமைச்சரின் பெயர் யாதென்பதையும்;

(ii) மேற்படி வாகனம் அனுமதியின்றி எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

(iv) மேற்படி வாகனத்தின் பாகங்கள் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி நட்டத்தை அறவிடுவதற்கு மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

(vi) மேற்படி அரச சொத்தின் குற்றவியல் கையாடல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற புலனாய்வின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

(vii) இது தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-26

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)       ඔව්.

(ආ)         (i)      GB - 2865 අංක දරන ඩිෆෙන්ඩර් රථය නිල වශයෙන් අමාත්‍යවරයෙකුට නිදහස් කර  නොතිබුණි.

              (ii)      එම රථය 2011 සිට 2015 දක්වා වසර 04ක කාලයක් අනවසරයෙන් භාවිත කර තිබුණි.

             (iii)      ආයතනය දැනුවත් වී තිබුණද, කිසිදු පියවරක් ගෙන නොතිබුණි.

             (iv)      දළ වශයෙන් ලක්ෂ 30ක් පමණ වේ.

(v) 2015.03.09 දින අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවෙහි පැමිණිල්ලක් ගොනු කොට ඇත.

(vi) අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් මෙම රථයට සිදු වී ඇති නිත්‍ය අලාභය කවරේද යන්න 2016.01.05 දිනැති ලිපිය මඟින් වාර්තා කරන ලෙස දන්වා ඇත.

(vii) අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ විමර්ශන කටයුතු අවසන් වීමෙන් පසුව අවශ්‍ය ඉදිරි ක්‍රියා මාර්ග ගනු ලැබේ.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2016-05-17

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks