பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
236/ ’15
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆம் ஆண்டின் சனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மூலம், முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் புகைப்படத்துடன் கூடிய 50 இலட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டு ரூபா 29,400,000 பணத் தொகை முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 2015 ஆண்டுக்காக 18 இலட்சம் சமுர்த்தி பெறும் குடும்பத்தினரிடையே விநியோகிப்பதற்கு 50 இலட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) குறித்த செலவை அங்கீகரித்த அதிகாரி யாரென்பதையும்;
(iii) இவருக்கு மேற்படி பணத் தொகையை அங்கீகரிக்கும் அதிகாரம் உள்ளதா என்பதையும்;
(iv) மேற்படி 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்ட நிறுவனம் யாதென்பதையும்;
(v) அதன் பொருட்டு கொள்வனவு நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) வாழ்வின் எழுச்சி நிதியத்தின் நிதியை தமது கட்சியின் தேர்தல் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடாகப் பயன்படுத்தல் தொடர்பாக நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் புலனாய்வின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(ii) ஏற்புடைய திணைக்களம் அல்லது அமைச்சு மேற்படி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக புலனாய்வொன்றை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதன்போது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை யாதென்பதையும்;
(iv) இதற்கான செலவு வாழ்வின் எழுச்சி நிதியத்திலிருந்து ஏற்கப்பட்டிருப்பின், ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-09
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-05-04
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks