04

E   |   සි   |  

 திகதி: 2016-02-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0223/2016: தனியார் துறை ஊழியர்கள் :சம்பள அதிகரிப்பு

223/ '15

கெளரவ டலஸ் அழகப்பெரும,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூபா 2500/- ஆல் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதென்பதையும்;

(ii) எனினும் 2015 நவம்பர் 01 ஆம் திகதி வரை தனியார் துறையின் எந்தவோர் ஊழியருக்கும் குறிப்பிட்ட ரூபா 2500/- சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்பதையும்;

(iii) அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூபா 10,000/- ஆல் அதிகரிக்கப்பட்டமையினால், 2016 ஆம் ஆண்டுக்காக நிலுவைச் சம்பளத்துடன் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் ரூபா 5000/- ஆல் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) 2015.11.01 ஆந் திகதியன்று உள்ளவாறு இலங்கையின் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முழு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) இவர்களில் ஊழியர் சேமலாப நிதியத்தில் பங்களிப்புப் பெறாத ஊழியர்கள் உள்ளனரா என்பதையும்;

(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-10

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-10

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks