பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
211/'15
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கடந்த அரசாங்கத்தினால் 1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கும் 5000 ஆரம்ப பாடசாலைகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் ED/3/37/6/147/sub ஆம் இலக்க 2013.01.11 ஆம் திகதிய கடிதத்தின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) அதன் பிரகாரம், 1000 இரண்டாம் நிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சமாந்திரமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், இரத்தினபுரி, பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குரிய தமிழ் மொழிமூல முஸ்லிம் ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி முன்மொழிவுகளை முன்வைத்துள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள், பதவிகள் மற்றும் அவ்வாறு முன்மொழியப்பட்ட பாடசாலைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி முன்மொழிவுகளில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) குறிப்பிட்ட பாடசாலைகள் யாவையென்பதையும்;
(iii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை அண்ணளவாக எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-28
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-28
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks