01

E   |   සි   |  

 திகதி: 2015-12-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

0207/2015: Permanent Home for Ms. Najeerdeen from Kandy

207/ '15

 

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி, கெப்பெட்டிபொல மாவத்தை, 14/3 ஆம் இலக்க இடத்தில் அப்போது குடியிருந்த திரு.கே.எஸ். நஜிர்தீன் மற்றும் அவரது குடும்பத்தின் அங்கத்தவர்களுக்கு சொந்தமான வீடு, பஸ்தரிப்பு நிலைய இரண்டாம் கட்ட நிர்மாணிப்புக்காக உடைத்து அகற்றப்பட்டதென்பதையும்;

(ii) திரு. நஜிர்தீன் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கு பல்லேகெலே, கிராம எழுச்சி நிலப்பரப்பில் அமைந்துள்ள வரிசை வீடு இலக்கம் 02 எனும் இடத்தில் தற்காலிகமாக குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இற்றைவரை நிரந்தர வீடொன்று வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) திரு. நஜிர்தீனின் விதவை மனைவி தனது பிள்ளைகளுடன் தற்போது தெல்தொட்ட, ரலிமங்கொட, 402 ஆம் இலக்க இடத்தில் குடியமர்ந்துள்ளதோடு நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பிரதிப் பணிப்பாளரின் 5/සීපී/8/5/11 இலக்கமும் 1997/11/12 ஆந் திகதியும்கொண்ட கடிதம் மூலமாக வாக்குறுதி அளித்துள்ளவாறு குடியமர்வதற்காக கண்டி நகரத்தில் வீடொன்றினை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-16

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks