01

E   |   සි   |  

 திகதி: 2015-12-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0205/2015: Mr. A.M.Sahabdeen - for a laborer post in a school

205/ '15

 

கௌரவ எம். எச். எம் சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மடவல கடைவீதி, பங்களாகெதர, 21 ஆம் இலக்கத்தில் வசிக்கும் திரு. ஏ.எம். சஹாப்தீன், க/மதீனா தேசிய பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் தொழிலாளராக 2006 ஆம் ஆண்டு தொடக்கம் பணிபுரிகின்றார் என்பதையும்;

(ii) இவரின் சேவை மற்றும் சேவைக்காலத்தை கவனத்திற்கொண்டு அமய அல்லது தற்காலிக அடிப்படையில் சேவையில் அமர்த்துவதற்காக உரிய ஆவணங்கள் அடிக்கடி மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ​என்பதையும்;

(iii) இறுதியாக, 2014.11.18ஆம் திகதிய விண்ணப்பப்படிவம், அதிபர்/வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) திரு. சஹாப்தீனுக்கு அமய அல்லது தற்காலிக அடிப்படையில் தொழிலாளர் பதவியொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-12

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks