01

E   |   සි   |  

 திகதி: 2015-12-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0204/2015: New Building for Muslim College, Deltota

204/'15

 

கௌரவ எம். எச். எம். சல்மான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மத்திய மாகாணத்தின் கண்டி, தெல்தொட்ட, முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு (நவோத்யா பாடசாலை) புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கவனத்திற்கொண்டு சனாதிபதி செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் மத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சரின் செயலாளரது CPC/CMC/3/1/1 இலக்கமும் 2012.10.24 திகதியும் கொண்ட கடிதம் மூலமாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து அறிக்கையொன்று கோரப்பட்டதென்பதையும்;

(ii) அதற்கிணங்க 2012.11.12 ஆந் திகதி வலயக் கல்விப் பணிப்பாளர் களப் பரிசோதனையை மேற்கொண்டு அங்கு கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்புக்களின் எண்ணிக்கைக்கிணங்க இடவசதி போதாதென்பதால் புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொடுப்பது பொருத்தமானதென பரிந்துரைத்துள்ளாரென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இந்த வித்தியாலயத்திற்காக புதிய இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-11

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks