பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
197/ '15
கௌரவ விஜித ஹேரத்,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2003 ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் போது அதில் பணியாற்றிய 3100 ஊழியர்களில் சுமார் 1500 போ் தொழில்களை இழந்தனர் என்பதையும்;
(ii) ஏதேனும் நிறுவனமொன்று 'பர்க்' நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் போது ஊழியர்களுக்கு உரித்தாக வேண்டிய 10% நலனையும் இவர்கள் இழந்தார்கள் என்பதையும்;
(iii) உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின்படி கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட போதிலும் தொழில் இழந்த ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் அமர்த்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மீண்டும் தொழில் கிடைக்காத காரணத்தினால் அநீதிக்கு உள்ளான ஊழியர்களுக்கு தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-04
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks