04

E   |   සි   |  

 திகதி: 2015-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0194/2015: LTTE suspects and convicted in Custody

194/ '15

 

கௌரவ ஜயந்த சமரவீர,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வரும் தவறுகளுக்காக சந்தேக நபர்களாகக் கருதப்பட்டுள்ளவர்கள் மற்றும் தண்டனைக்குட்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(ஆ) இவர்களின் பெயர்கள், தவறின் தன்மை, இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் சிறைக்கூடங்களின் இலக்கங்கள் கைதிகளுக்கேற்ப யாவையென்பதை வெவ்வேறாக அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) 2015 சனவரி முதல் 2015 ஒக்டோபர் 20 வரையிலான காலகட்டத்தினுள் பிணை வழங்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபர்கள் மற்றும் கைதிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இவர்களின் பெயர்கள், பிணை வழங்கிய அல்லது விடுவித்த நீதிமன்றம், சிறைச்சாலை மற்றும் விடுவிக்கப்பட்ட திகதி ஒவ்வொரு ஆள் சார்பிலும் வெவ்வேறாக யாதென்பதையும் அவர் சபைக்கு சமர்ப்பிப்பாரா?

(உ) (i) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய தவறுகளுக்கு தண்டனை பெற்றவர்களை அரசியல் கைதிகளாக கருதுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ்வாறு தீர்மானிப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஊ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-01

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks