04

E   |   සි   |  

 திகதி: 2015-12-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0193/2015: Army Intelligence Officers arrested regards to Prageeth Eknaligoda case

193/ '15

 

கௌரவ ஜயந்த சமரவீர,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிரகீத் எக்னெலிகொட காணாமற் போதல் பற்றிய சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வுபெற்ற 11 உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்பதையும்;

(ii) இதனுடன் தொடர்புடையதாக ​ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கேற்ப கிரித்தலை இராணுவ முகாமில் இருந்த இரகசிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் இரகசிய பொலிசாரினால் விசாரணைக்கென மேற்படி இராணுவ முகாமிலிருந்து அகற்றப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இந்த நடவடிக்கையின் காரணமாக புலானாய்வுப் பிரிவுக்கு சொந்தமான, தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் வௌிப்படுவதற்கான ஆபத்து உள்ளதென்பதையும்;

(iv) இதன் காரணமாக புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மனம் தளர்வடைவதற்கும் ஊக்கம் குன்றுவதற்கும் ஆளாவதன் மூலம் புலானய்வு நடவடிக்கைகள் பாதிப்படைவதன் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதகமான தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதென்பதையும்;

(v) இந்நடவடிக்கையின் காரணமாக புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஆளடையாளம் வௌிப்படுவதால் 2002 மிலேனியம் சிட்டி சம்பத்தின் போது நடந்ததைப் போன்று இவ்வுத்தியோகத்தர்களின் உயிருக்கு கடும் ஆபத்து நிலை ஏற்படும் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) (அ) (i) இல் குறிப்பிடப்படுள்ள புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் யாதென்பதையும், இவர்களுக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தர் யாரென்பதையும்;

(ii) மேற்படி நடவடிக்கையின் காரணமாக புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தைத் தடுத்து இவர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-15

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks