logo

02

E   |   සි   |  

 திகதி: 2015-12-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0182/2015: பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையஅமைப்புகள் மற்றும் ஆட்கள்: விபரம்

182/ '15

 

கௌரவ டலஸ் அழகப்பெரும்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் இலக்கம் 1 இன் 4 (2) அத்தியாயத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு 2014.03.21 ஆம் திகதிய 1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையதென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை மற்றும் ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) ஏற்புடைய அமைப்புகளினதும் ஆட்களினதும் அனைத்துத் தகவல்களும் அடங்கிய விபரமொன்றை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) இன்றேல், ஏன் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) LTTE அமைப்பினால் 1976 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயல்கள் சம்பந்தமாக, இலங்கை பொலிஸ் மேற்படி ஆ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் ஆட்கள் சம்பந்தமாக புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதா என்பதையும்;

(ii) ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையினால் 2001 செத்தெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட 1373 ஆம் இலக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்புடைய சந்தேக நபர்களை எமது நாட்டுக்கு பெற்றுத் தரும்படி ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் , ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-08

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)       ඔව්.

(ආ)         (i)      සංවිධාන 16ක් සහ පුද්ගලයින් 424.

              (ii)      ඔව්.              

                        2014.03.21 දිනැති ගැසට් නිවේදනය අනුව සංවිධාන 16ක් සහ පුද්ගලයින් 424කි.

                        2015.11.20 දින සංශෝධිත ගැසට් නිවේදනයට අනුව සංවිධාන 08ක් සහ පුද්ගලයින් 155කි.

                          ඒ සඳහා වන ඇමුණුම 01 සහ ඇමුණුම 02 සභාගත* කරනවා.

(iii) පැන නොනඟී.

(ඇ) (i),(ii) ශ්‍රී ලංකා පොලිස් දෙපාර්තමේන්තුව නීතිය, සාමය හා දක්ෂිණ සංවර්ධන අමාත්‍යාංශ විෂය පථයට අයත් වන බැවින් ඒ සඳහා එම අමාත්‍යාංශයෙන් විමසන්නේ නම් මැනවි.

(ඈ) පැන නොනඟී.

பதில் தேதி

2015-12-08

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks