பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
168/ '15
கௌரவ லக்கி ஜயவர்தன,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் காரணங்களினால் உடுநுவர தேர்தல் தொகுதியில் வாழ்வின் எழுச்சி கொடுப்பனவுகள் கிடைக்காத குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள் உள்ளன என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், இவர்களுக்கு துரிதமாக மேற்படி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) உடுநுவர தேர்தல் தொகுதியில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் மூலம் மாதாந்தம் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவின் மொத்த மாதாந்தப் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி கொடுப்பனவுத் தொகைகள் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், தொகுதிகளுக்கு அமைய ஒவ்வொருவருக்கும் எவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படுகின்றதென்பதையும்;
(v) அவ்வாறு தொகுதிகளின் அடிப்படையில் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;
(vi) 2015 சனவரி 08 ஆம் திகதி உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் கீழ் வாழ்வின் எழுச்சி கொடுப்பனவை பெறுவோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(vii) ஆமெனில், அத்தகைய ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள விதம் யாது என்பதையும்;
அவர் சபையில் அறிவிப்பாரா?
(இ) உடுநுவர பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வாழ்வின் எழுச்சி கொடுப்பனவுகளை பெறுகின்ற குடும்பங்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் அவர்கள் பெறுகின்ற கொடுப்பனவுத் தொகைகள், கிராம அலுவலர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-27
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-27
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks