01

E   |   සි   |  

 திகதி: 2015-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0167/2015: ஹந்தான வீடமைப்புத் திட்டம்: விபரம்

167/ '15

 

கௌரவ லக்கி ஜயவர்தன,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 1977 இல் அப்போதைய வீடமைப்பு அமைச்சரான காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடுத்தர வகுப்பினருக்காக கண்டி ஹந்தான பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான மேற்படி திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;

(ii) இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) தற்போது சகல வீடுகளும் குடியிருப்பாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப் பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனின், அது எவ்விதமாக என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) தற்போது மேற்படி நிலப்பகுதியில் அதிகாரசபைக்கு சொந்தமான வெற்றுக் காணிகள் காணப்படுகின்றனவா என்பதையும்;

(ii) ஆமெனின், இக்காணிகளின் அளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iii) கடந்த அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சரினால் இந்நிலப்பகுதியில் சொகுசு வீடுகளை நிர்மாணிக்க காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iv) ஆமெனின், அது யாருக்கு; மற்றும் அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணிகளின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;

(v) இக்காணி விற்பனை செய்யப்பட்டதால் அதிகாரசபை பெற்ற வருமானம் எவ்வளவென்பதையும்;

(vi) தற்போது இக்காணிகளில் சொகுசு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(vii) ஆமெனின், இவற்றின் விற்பனை விலை எவ்வளவென்பதையும்;

(viii) அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகள் யாவை என்பதையும்;

(ix) வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லையெனில், இக்காணிகள் மீண்டும் அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்படுமா என்பதையும்;

(x) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-26

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-26

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks