04

E   |   සි   |  

 திகதி: 2010-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0270/2010: Training in Kandyan Dancing

0270/ ‘10

கெளரவ ராஜீவ விஜேசிங்க,— தேசிய மரபுரிமைகள், கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கண்டிய நடனம் மற்றும் பேரிகை வாசித்தலுக்கு அரச மற்றும் ஏனைய நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புக்களையும்,

           (ii)    இந்நடன வகைகளில் சிறந்தவற்றை தொலைக்காட்சி மற்றும் திரைப் படங்களுக்காக ஒலி/ஒளிப்பதிப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும்,

(iii) இத்துறையில் பயிற்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், மரபு ரீதியான நடனவகைகளைக் கற்பதையும் பேணிப்பாதுகாத்தலையும் உறுதிப்படுத்துவதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்,

(iv) இவற்றையும் பரத நாட்டியம் உட்பட ஏனைய மரபு ரீதியான நடனவகைகளையும் வெளிக்கொணரும் நடனத்திற்கான தேசிய அரங்காற்றுகைப் பயிற்சி நிலையமொன்று நிறுவப்படுவதை அவர் ஊக்குவிப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல்,  ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-05

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks