பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையர்கள் புற்று நோய்க்கு இரையாகக்கூடிய போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றதென்பதையும்;
(ii) இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை முறைசார்ந்ததொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
(iii) இதன் காரணத்தினால் நாட்டின் மனித வளமும் அதேபோன்று பணமும் அழிவடைகின்றதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
(ஆ) (i) தற்போது இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற புற்று நோய்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி நோய்கள் ஏற்படுவதற்கு ஏதுவான பிரதானமான காரணங்கள் ஒவ்வொரு நோய்க்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) அக் காரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அது எந்த விதத்தில் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கடந்த 05 ஆண்டுகளில் புற்று நோயாளர்களின் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) கடந்த 05 ஆண்டுகளில் புற்று நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத்தொகை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-09-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks