02

E   |   සි   |  

 திகதி: 2016-03-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0095/2016: வனங்கள் மற்றும் ஒதுக்கங்கள் : பாதுகாப்பு

95/ ’15

 

கௌரவ புத்திக பத்திறண.— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     சேனைப் பயிர்செய்கை, விலங்குகளை வேட்டையாடுதல் அத்துடன் பல்வேறு அவிவிருத்தி திட்டங்கள் காரணமாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய வனங்களுக்கு சேதம் விளைகின்றதென்பதையும்;

(ii) உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக இத்தகைய சேதங்களை தடுத்து நிறுத்த இயலாதுள்ளதென்பதையும்;

(iii) மேற்படி வனங்கள் சேதமடைதலானது முழுமொத்த இலங்கையிலும் காலநிலை, பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான தாக்கங்களை விளைவிக்கின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கடந்த இரண்டு ஆண்டு காலத்தினுள் இக்காடுகளில் வேட்டையாடுதல் மற்றும் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபடுதல் தொடர்பாக சட்டத்தின் முன் தவறாளிகளாகியவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) ஒதுக்கங்களில் வேட்டையாடுவதையும் சேனைப் பயிர்செய்கைகளில் ஈடுபடுவதையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) ஒதுக்கங்களின் பாதுகாப்பிற்காக தற்போதுள்ள மனித மற்றும் பௌதீக வளங்கள் பற்றி திருப்தியடைகின்றாரா என்பதையும்;

(ii) இன்றேல், ஒதுக்கங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-03-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-05-05

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks