பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0087/2015: Rakna Lanka Company - Benefits

87/ '15

 

​கௌரவ டலஸ் அழகப்பெரும,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ரக்னா ஆரக்‌ஷன லங்கா லிமிட்டட் பாதுகாப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அது தாபிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும், அவ்வாண்டு முதல் 2015 வரை கம்பனியின் கணக்குகள் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை தனித்தனியாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கம்பனி மூலம் பாதுகாப்புச் சேவை வழங்கப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(ii) பாதுகாப்பு வழங்குவதற்காக மேற்படி நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட ஆண்டு, திகதி மற்றும் நிறுவனங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) 2015 சனவரி முதல் இற்றை வரையிலான காலகட்டத்தில் மேற்படி கம்பனியை சேவை வழங்குவதிலிருந்து அகற்றியுள்ள அரச நிறுவனங்கள் உள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அவை யாவையென்பதையும்;

(iii) அவ்வாறு அகற்றுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(iv) அதற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பனிகள் யாவையென்பதையும்;

(v) மேற்படி பதிலீட்டுக் கம்பனிகளின் பணிப்பாளர்களது பெயர்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) (i) மேற்படி கம்பனி ஆரம்பிக்கப்பட்டது முதல் வருடாந்தம் ஈட்டியுள்ள வருமானம் மற்றும் இலாபம் எவ்வளவென்பதையும்;

(ii) பொதுத் திறைசேரிக்கு வருடாந்தம் வழங்கியுள்ள பணத்தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-23

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks