பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
81/'15
கௌரவ புத்திக பத்திறண,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலை களின் பெயர்கள், அமைந்துள்ள பிரதேசங்கள் மற்றும் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு தோட்டம் மற்றும் தொழிற்சாலையைச் சார்ந்ததாக சேவையாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) கடந்த 5 ஆண்டுகளினுள் மேற்படி தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இலாபம் ஈட்டிய மற்றும் நட்டம் அடைந்த தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி காலகட்டத்தில் மேற்படி ஒவ்வொரு தோட்டமும் அல்லது தொழிற்சாலையும் பெற்றுள்ள இலாபம் அல்லது நட்டம் எவ்வளவென்பதையும்;
தனித்தனியாக அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
(இ) (i) நட்டமடைந்த அரச தோட்டங்களுக்கு திறைசோியிலிருந்து பணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், வழங்கப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி பணம் வழங்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் யாவையென்பதையும்;
(iv) நட்டமடைகின்ற அரச தோட்டங்களை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-02
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-26
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks