04

E   |   සි   |  

 திகதி: 2015-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0078/2015: Forest Conservation Department asking traditional Farmers off their lands - North Central Province

78/ '15

 

கௌரவ சந்திம கமகே,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) வட மத்திய மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் தங்கிவாழும் விவசாயிகளுக்கு, அவர்களது பூர்வீகக் காணிகளிலிருந்து வெளியேறுமாறு கோரி, காடு பேணல் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தங்களைச் செய்கின்றதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) இதன் காரணமாக சேனைப் பயிர்ச்செய்கையாளர்களும் பாற்பண்ணை விவசாயிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றார்கள் என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இவ்விதம் பூர்வீக பயிர்ச்செய்கை நிலங்களை இழப்பதற்கு ஏற்புடையதான சட்டம் எத்திகதியிலிருந்து அமுலுக்கு வரும்;

(ii) குறித்த வன ஒதுக்கு எல்லை நிர்ணயங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளனவா;

(iii) ஆமெனில், வன ஒதுக்குப் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் விஸ்தரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வன ஒதுக்கு எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவும் வெவ்வேறாக யாது;

(iv) எதிர்காலத்தில் இந்த விவசாயிகள் தொடர்பில் ஏதேனும் நிவாரண வழிமுறையொன்றை பின்பற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா;

(v) இதற்காக எடுக்கும் காலம் யாது;

(vi) அதுவரை குறித்த விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-20

கேட்டவர்

கௌரவ சந்திம கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks