பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
59/ '15
கெளரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நக்கள்ஸ் ஒதுக்கத்தில் ஏலக்காய் செய்கை நடைபெறுகின்றதென்தையும்;
(ii) இதனால் ஒதுக்கத்துக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
(iii) மாத்தளை வன பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதென்பதையும்;
(iv) ஒதுக்கத்தின் அழிவு முழு நாட்டினதும் சுற்றாடல் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஒதுக்கத்தில் காணப்படும் அனுமதியற்ற பயிர்ச்செய்கை நிலத்தின் பரப்பளவு எவ்வளவு;
(ii) அனுமதியற்ற பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாததேன்;
(iii) ஒதுக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iv) ஏலக்காய் செய்கையை ஒதுக்கத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்வாரா;
(v) ஆமெனில், அது எத்திகதியில்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) ஒதுக்கத்தில் வாழும் ஓரிடம் சார்ந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான தொகை மதிப்பு இறுதியாக மேற்கொள்ளப்பட்டது எப்போது;
(ii) அதன் பிரகாரம் ஒதுக்கத்தில் வாழ்கின்ற ஓரிடம் சார்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை;
(iii) ஏலக்காய் செய்கை காரணமாக ஓரிடம் சார்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அடர்த்தி எவ்வளவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்பதை மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா;
(iv) ஆமெனில், அது எத்திகதியில்;
(v) ஏலக்காய் செய்கை காரணமாக ஒதுக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அறிக்கையொன்றைக் கோருவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(vi) ஆமெனில், அது எத்திகதியில்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-27
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks