02

E   |   සි   |  

 திகதி: 2015-11-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0044/2015: மஸ்கெலிய ஓயா மின் உற்பத்தி நிலையங்கள் : சுற்றாடல் தாக்கம்

44/ '15

கெளரவ புத்திக பத்திறண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) லக்ஷபான நீர்வீழ்ச்சிக்கு மேற்பகுதியில் மஸ்கெலி ஓயாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் நிர்மாணிக்கப்பட்டுவரும் மின் உற்பத்தி நிலையங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(ii) இந்த மின் உற்பத்தி நிலையங்கள் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக சுற்றாடல் ஆய்வு அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த அறிக்கைகளை இச் சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) லக்ஷபான நீர்வீழ்ச்சிக்கு மேற்படி மின் உற்பத்தி நிலையங்களினால் சேதம் ஏற்படலாம் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தகைய சேதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-04

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-04

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks