பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
32/ '15
கௌரவ புத்திக பத்திறண,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் பல கிராமிய வீதிகள் சீரழிந்த நிலையில் உள்ளனவென்பதையும்;
(ii) இதனால் அம்மக்கள் பெருஞ்சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனரென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தின் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
(ii) அப் பணத்தொகையைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் யாவை;
(iii) மேற்படி ஒவ்வொரு வீதிக்கும் செலவிடப்பட்ட பணத்தொகை தனித்தனியாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மாத்தறை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் பற்றிய மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில் அவ்வீதிகள் யாவை;
(iii) அவ்வீதிகள் இறுதியாக புனரமைக்கப்பட்ட திகதி தனித்தனியாக யாது?
(iv) அவ்வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா;
(v) ஆமெனில், அத்திட்டங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-19
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks