பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
29/ '15
கௌரவ புத்திக பத்திறண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சப்பிரகமுவ மாகாணத்தில், மிகவும் முக்கியமான பௌத்த வழிபாட்டுத் தலமாகிய கூரகல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளல் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கூரகல புனிதத் தலத்திற்கு சொந்தமான காணியின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி நிலப்பரப்பின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அகழ்வுகளின் மூலம் கிடைத்த தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கூரகல புனிதத் தலத்தின் பௌத்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி அகழ்வுகளை இடையறாமல் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்திகதி எப்போதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks