logo

03

E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0027/2015: Child Abuses and Rapes - 2014

27/ '15

 

கௌரவ புத்திக பத்திறண,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2014 ஆம் ஆண்டினுள் அறிக்கையிடப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை, பெண்கள் பாலியல் வல்லுறவு சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி சம்பவங்களுக்கு தவறாளிகளாக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி உத்தியோகத்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் போதைப்பொருள் தவறுகள் சம்பந்தமாக போதியளவு சட்டங்கள் இந்நாட்டினுள் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் போதியளவாக இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

(iii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;

(iv) அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks