பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
25/ '15
கௌரவ புத்திக பத்திறண,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களின் பாவனைக்காக விநியோகித்துள்ள நீரின் அளவு தனித்தனியாக எத்தனை லீட்டர் என்பதையும்;
(ii) தற்போது குழாய் நீர் வசதியை பெற்றுக்கொள்கின்ற மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி பாவனையாளர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையின் சதவீதமாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது குழாய் நீர் வசதிகளில்லாத, ஆயினும் நீர் வசதி தேவைப்படுகின்ற மக்கள் பற்றிய ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இவர்களுக்கு நீர் வழங்கத் தேவையான நீரின் லீட்டரளவு மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அதன் அளவு எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி நீரின் அளவைப் பெற்றுக்கொள்வதற்குப் போதியளவிலான நீர் மூலங்கள் நாட்டினுள் உள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) கடல் நீரை சுத்திகரித்து குடி நீராக மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திட்டங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா ?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks