04

E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0018/2015: The Funds given by SEC to Ceylon Premier Sports Ltd.

18/ '15

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அப்போதைய தவிசாளரின் சிபாரிசின் படி ஆணைக்குழுவின் நோக்கெல்லைக்குப் புறம்பான சந்தை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கெனக் கூறி 2013 ஓகத்து மாதம் 'தாருன்யட ஹெட்டக்' அமைப்பிற்கு வழங்கிய ரூபா 50 இலட்சம் தொகையை சிலோன் பிரிமியர் ஸ்போட்ஸ் லிமிடடெட் எனப்படும் பங்குச் சந்தை அல்லது நிதி நடவடிக்கைகள் பற்றி எந்தத் தொடர்பும் இல்லாத கம்பனியொன்றுக்குச் செலுத்தியிருப்பதன் ஊடாகப் புரிந்துள்ள நிதி மோசடி பற்றி அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி மோசடி பற்றிய புலனாய்வு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(ii) அதனுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதையும்;

(iii) ஆமெனில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிடுவதற்காக ஆணைக்குழு எடுத்துள்ள அல்லது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் புலனாய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) மேற்படி பணத்தைப் பெற்றுக்கொண்ட சிலோன் பிரிமியர் ஸ்போட்ஸ் கம்பனியின் பணிப்பாளர்கள் யாவர் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இந்த நிதி மோசடி பற்றி பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் புலனாய்வை மேற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகச் செயற்பட இருக்கின்ற தடைகள் யாவை என்பதை அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks