04

E   |   සි   |  

 திகதி: 2015-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0017/2015: Weeraketiya Project - Anomalies

17/ '15

 

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் 2014.02.17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2014.11.06 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்ட வீரகெட்டிய கருத்திட்டம் என்பது யாது என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்குரிய ஒவ்வொரு உப பணிகள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு உப பணிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iv) காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களினுள் வீரகெட்டிய கருத்திட்டம் அடங்குகின்றதா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இதற்கு கடற்படையினர் உழைப்புப் பங்களிப்பினை வழங்கியுள்ளனரா என்பதையும்;

(ii) அதற்காக கொடுப்பனவுகள் செய்திருப்பின் அத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) இது தொடர்பாக அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சினால் அல்லது காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நிறுவன ரீதியிலான புலனாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) இந்தக் கருத்திட்டம் தொடர்பாக நிதிசார் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வொன்று மேற்கொள்ளப்படின் அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) இதன் மூலம் இழக்கப்பட்ட 61 மில்லியனுக்கு அதிகமான தொகையை அறவிட்டுக் கொள்வது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-20

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks