பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
16/' 15
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) வாழ்வின் எழுச்சி நிதியத்திற்குச் சொந்தமான ரூபா 3000 மில்லியன் தொகை 2015 சனாதிபதி தேர்தலை அடிப்படையாகக்கொண்டு 2014 நவெம்பர் 02 ஆந் திகதி தொடக்கம் 2014 நவெம்பர் 09 ஆந் திகதி வரையான 07 நாட்களுக்குள் முறைகேடாகக் கையாளப்பட்டமை தொடர்பில் அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) அது சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இற்றைவரை வழக்கு தொடரப்பட்டிராவிடின் மேற்படி புலன்விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அதன் மூலமாக வாழ்வின் எழுச்சி நிதியம் இழந்த ரூபா 3000 மில்லியன் பணத்தொகை சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவை;
(ii) அரசாங்கத்திற்குச் சொந்தமான பல்வேறு நிதியங்களை இவ்விதமாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்கள் எவ்விதமான அமைச்சரவைத் தீர்மானமும் இல்லாமல் தமது தற்றுணிபின் பிரகாரம் நாசமாக்க வாய்ப்பு கிடைத்தமை பாதகமான ஒரு முன்னுதாரணமாக அமைவதால் எதிர்காலத்தில் இத்தகையவற்றைத் தடுக்க விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரென்ற வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இத்தகைய நிதிசார் குற்றங்கள் சம்பந்தமான புலனாய்வுகள் தொடர்பில் நீதிமன்றச் செயற்பாடுகளை துரிதமாக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு வௌிப்படுத்துவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-03
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-03
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks